கஜேந்திரகுமார் எம்.பிக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாளை (14) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி திஸ்ஸ விஹாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு , போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்...

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – தொடர்ந்தும் அதனை நிர்வகிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதை கருத்தில் கொண்டு,இது தொடர்பில் காணப்படும் குழப்பங்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏஎம்பிஎம்பி அத்தப்பத்து தெரிவித்துள்ளார். இராணுவம் தற்போது அந்த ஆலயத்தை நிர்வகித்துவந்தாலும் அரசாங்கம்...
Ad Widget

தையிட்டியில் தமிழ் குடும்பங்களின் காணி உரிமைகளில் கை வைப்பது ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கை வைப்பதற்கு சமமானது- கஜேந்திரகுமார்

தையிட்டியில் அந்த பகுதியை சேர்ந்த தமிழ் குடும்பங்களின் காணி உரிமைகளில் கை வைவக்கின்ற போது, ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கை வைப்பதற்கு அது சமமானது என நாங்கள் கருதவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட...

இன்றும் மின்வெட்டு !

நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் மற்றும் வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை (13) மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக மின் மற்றும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்காலிக மின்வெட்டுக்கு பொதுமக்கள் தயாராக இருக்குமாறு அமைச்சு கேட்டுக்...