- Friday
- February 21st, 2025

தையிட்டி விகாரையின் காணி தொடர்பில் இன்று (11) பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. காணி உரிமையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். விகாரைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குப் பதிலாக, மாற்றுக்காணிகளைப் பெறுவது தொடர்பில் தாம், ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இவ்விடயம் குறித்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடாமல் வேறு நபர்களுடன் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...

தையிட்டி விகாரையின் காணி தொடர்பில் யாழ்ப்பாண மக்களின் விருப்பத்தை முதலில் கவனத்திற் கொள்ள வேண்டுமென, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தையிட்டி விகாரைக் காணி தொடர்பில் காணி உரிமையாளர்கள் இன்று (11) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுபற்றித் தெரிவித்த அமைச்சர்:...

தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை என்பதை உணராவிடில் பாரிய ஆபத்திற்கே இட்டுச் செல்லும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் திங்கட்கிழமை (10.02.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இராணுவ...

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமலை வலியுறுத்தியதுடன், வடக்கில் புதிதாக தென்னை பயிர்ச் செய்கை வலயத்தை ஆரம்பிப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த தென்னை பயிர்ச்...

மறைந்த தலைவர் மாவை.சோ.சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் 18பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது கட்சியை சிதைத்து ஓரங்கட்டுவதே அந்த சக்திகளின் பிரதான...