மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

மின்சார விநியோக முறையை சரியாக சீரமைக்க மின்வெட்டை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்று திங்கட்கிழமையும் (10) நாளை செவ்வாய்க்கிழமையும் (11) பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் கட்டம் கட்டமாக ஒன்றரை மணித்தியாலம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார...

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து...
Ad Widget

இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்த கும்பல்!

யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாகவிருந்த இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபா வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக...

தையிட்டி மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி. ஆதரவு!

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அழைப்பு விடு்க்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல்,...

யாழ். பல்கலையில் மோதல்!! இரு மாணவர்கள் காயம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்யை (09) தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காயமடைந்த இரு மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 3ஆ ம் மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது....

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை மக்கள் பெரும் அசௌகரியம்!!

நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (9) முற்பகல் 11.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். திடீர் மின் தடையால் பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகமும் தடைபட்டதோடு, வீதி சமிஞ்ஞைகளும் செயலிழந்தன. கொழும்பிலுள்ள தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாகவே இந்த மின் விநியோகத் தடை...