கிளிநொச்சியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு!

கிளிநொச்சியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பரந்தன் - புதுக்குடியிருப்பு ஏ - 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியிலேயே இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏ - 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் கட்டுமானம் இடம்பெற்றுவரும் பாலத்திலேயே குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...

இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்திய E-Traffic செயலி!

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் (IGP), சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. e-Traffic செயலியானது போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் தொடர்புடைய சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க பொதுமக்களுக்கு அனுமதி...
Ad Widget

சத்தியமூர்த்தி தொடர்பில் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி யாழ். போதனா...

எரிபொருள் விலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

நேற்று (31-12-2024) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாகும். அத்துடன் மற்ற எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை எனவும்...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்!! புலமைப் பரிசில் பரீட்சை குறித்து துரித நடவடிக்கை!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏப்ரலில் புத்தாண்டுக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுதந்தர, புலமைப் பரிசில் பரீட்சை குறித்த பரிந்துரைகளை தாமதிக்க வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த...