- Saturday
- February 22nd, 2025

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் HMPV வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை எனவும், இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல எனவும் 20 வருடங்களாக இருந்து வரும் வைரஸ் எனவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட பேராசிரியை நிலிகா...

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக்...

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு...

நாடாளுமன்றில் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சபையில் தெரிவித்தார். சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அவர் நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருக்கும்...

முச்சக்கர வண்டிகளில் பாகங்கள் பொருத்துவதற்கும் அலங்காரம் செய்வதற்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வகைகளின் கீழ் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தனியார் தொலைக்காட்டசி நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். "முச்சக்கர வண்டியில் மாற்றம்...

நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறைகளில் தமிழ் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நேற்றைய தினம் பல்கலைக்கழக முன்றலில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றித் தலைவர் கு.துவாரகன் மற்றும் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன்,...

ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (06) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் தாய்மாரும், வென்னப்புவவைச் சேர்ந்த தாயொருவரும், குறித்த வலிந்து இணைக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ள கணவருக்காக...

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைச் சந்தித்து, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உத்தேசித்திருக்கிறார். பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர்வருங்காலத்தில் அரசாங்கத்தினால் புதிய...

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் திங்கட்கிழமை (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்டீரியாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கால்நடைகளின்...

சீனாவில் ஒரு மர்மமான வைரஸ் வெடிப்பை அடுத்து, இது COVID-19 தொற்றுநோயைப் போல உலகளவில் பரவக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் இன்னும் கவலை தெரிவிக்கின்றனர். இந் நிலையில் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவில் பரவும் இந்த வைரஸ் ‘மனித மெட்டாப்நியூமோவைரஸ்’ (HMPV) என அழைக்கப்படுகிறது. குறிப்பாக வடக்குப் பகுதிகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே இந்த வைரஸ்...

சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன்படி சீனாவின் வடக்கு மாகாணங்களில் குறித்த வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் Human...

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார். யாழ்.தென்மராட்சியில் சட்ட விரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்படும் இடங்களை அமைச்சர் சந்திரசேகர் நேற்று (05) பார்வையிட்டார். தென்மராட்சிப் பிரதேசத்தின் சரசாலை வடக்கு மற்றும் மந்துவில் பகுதிகளில் சுண்ணக்கல் அகழப்பட்டுவரும்...

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பிய போது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. தன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பங்களிட்டிருந்தனர்.

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன. மேலும், சீனாவில் இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம்...

கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் ரக வாகனம் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில், சம்பவத்தன்றே இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. தந்தை தாய் மற்றும் மகள் ஆகியோர்...

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மற்றும் 2024 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் கல்வித்...

யாழ். நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் புரிந்து, வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அரியாலை மற்றும் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த மூவர் யாழ். பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டனர். யாழ் நகரில் புத்தாண்டுக்காக செவ்வாய்க்கிழமை (31) இரவு...

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவையை இன்று முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கப்பல் சேவை மீண்டும் தாமதமடைவதாக குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளதுடன் குறித்த கப்பல் சேவையை எதிர்வரும் 6ஆம்...

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர நேற்று புதன்கிழமை (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

All posts loaded
No more posts