- Saturday
- February 22nd, 2025

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப் பாதிப்பு காரணமாக குளங்களில் நீர்மட்டம் அதிகரித்தமையால் முதலைகளும் மக்கள் குடியிருப்புபகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை...

வைரஸ் பரவல் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் ஆஸ்துமா நோய் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளமையால் ஆஸ்துமா நோயாளர்கள் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு ஆளான சிறுவர்கள் குறித்தும் பெற்றோர் அவதானத்துடன் செயல்படுவதுடன் நோய் தீவிரமடையும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு களுபோவில போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க வலியுறுத்தியுள்ளார். சுவாசநோய் தொடர்பில்...

நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாடாளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், இன்றிலிருந்து மனதளவில் அரசாங்கத்திற்கு வழங்கிய அனைத்து ஆதரவை மீளப் பெற்றுக்கொள்வதாகவும்,...

மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்ப் பெண் உயிரிழந்தமை தொடர்பாக ஐங்கரநேசன் விடுத்துள்ள செய்தி அறிக்கையிலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :...

மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (22.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகண...

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 52 வயதான ஆசிரியர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள்...

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார். புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியினால் பெறுபேறுகளை மதிப்பிடுவதை...

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் நடைபெற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”15ஆவது வருடமாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சி தொடர்ந்து மூன்று தினங்கள் யாழ்ப்பாணம்...

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், ஓரினச்சேர்க்கை உறவுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனைகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களினால் அதிகளவான பாடசாலை மாணவிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவிகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுதல் மற்றும் உயிரை...

காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. புங்குடுதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வேளை சிறுமியை அவரது பெற்றோர் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு கொண்டுசென்றபோது, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை (20) சிறுமிக்கு கடும் சுகவீனம்...

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறும் நீதிமன்றம் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுன மீது...

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கைத்தடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்று காலை தொப்புள் கொடியுடன் சிசுவொன்றின் சடலம் மிதப்பதாக விவசாயிகள் சிலர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த...

இன்றையதினம் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பயணித்த வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுடன்...

யாழில் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடப்பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக் கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நெல்லியடி பொதுச்...

யாழ்ப்பாணத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டிப் பறித்த இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் மற்றும் காப்புறுதி நிறுவனமொன்றின் மாவட்ட முகாமையாளர் உள்ளிட்ட 6 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டிப் பறித்த இராணுவ...

யாழ்ப்பாணம் - குருநகரில் நேற்றையதினம் (19) காலை வீசிய பலத்த காற்றினால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்ததுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு விஜயம் சென்ற யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் சேத நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர். இதேவேளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட...

அஸ்வேசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில், வீடு...

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் 6 மாத காலத்தை வரையறுத்து 20 வீத மின்கட்டண குறைப்பை இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேவேளை, ஹோட்டல் மற்றும் அதனுடனான தொழிற்றுறையின் மின்கட்டணத்தை 31 சதவீத்ததால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

All posts loaded
No more posts