- Thursday
- January 9th, 2025
நாடாளுமன்றில் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சபையில் தெரிவித்தார். சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அவர் நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருக்கும்...
முச்சக்கர வண்டிகளில் பாகங்கள் பொருத்துவதற்கும் அலங்காரம் செய்வதற்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வகைகளின் கீழ் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தனியார் தொலைக்காட்டசி நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். "முச்சக்கர வண்டியில் மாற்றம்...
நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறைகளில் தமிழ் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நேற்றைய தினம் பல்கலைக்கழக முன்றலில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றித் தலைவர் கு.துவாரகன் மற்றும் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன்,...
ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (06) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் தாய்மாரும், வென்னப்புவவைச் சேர்ந்த தாயொருவரும், குறித்த வலிந்து இணைக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ள கணவருக்காக...
புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைச் சந்தித்து, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உத்தேசித்திருக்கிறார். பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர்வருங்காலத்தில் அரசாங்கத்தினால் புதிய...
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் திங்கட்கிழமை (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்டீரியாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கால்நடைகளின்...