- Thursday
- January 9th, 2025
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது. தன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பங்களிட்டிருந்தனர்.
கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன. மேலும், சீனாவில் இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம்...
கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் ரக வாகனம் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில், சம்பவத்தன்றே இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. தந்தை தாய் மற்றும் மகள் ஆகியோர்...
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மற்றும் 2024 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் கல்வித்...