- Thursday
- January 9th, 2025
யாழ். நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் புரிந்து, வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அரியாலை மற்றும் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த மூவர் யாழ். பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டனர். யாழ் நகரில் புத்தாண்டுக்காக செவ்வாய்க்கிழமை (31) இரவு...
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவையை இன்று முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கப்பல் சேவை மீண்டும் தாமதமடைவதாக குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளதுடன் குறித்த கப்பல் சேவையை எதிர்வரும் 6ஆம்...
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர நேற்று புதன்கிழமை (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
கிளிநொச்சியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பரந்தன் - புதுக்குடியிருப்பு ஏ - 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியிலேயே இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏ - 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் கட்டுமானம் இடம்பெற்றுவரும் பாலத்திலேயே குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் (IGP), சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. e-Traffic செயலியானது போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் தொடர்புடைய சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க பொதுமக்களுக்கு அனுமதி...