2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தொடர்பான அப்டேட்!

2024 ஆம் முடிவடைவதற்கு இன்னும் ஒன்பது நாட்களே எஞ்சியுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறையாக 26 தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2025 ஏப்ரல் மாதத்திலேயே அதிகபட்ச விடுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த மாதத்தில் மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 4 ஆகும்.

அதேநேரம், அடுத்தாண்டு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14 திங்கட்கிழமை வருவருடன், வெசாக் பெளர்ணமி தினம் 12 ஆம் திகதியும் கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் வருகின்றன.

தபால், சுங்கம் மற்றும் வானிலை ஆய்வுத் துறைகளுக்கும் மேற்கண்ட அரசு விடுமுறைகள் கிடைக்கும்.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொது விடுமுறை நாட்களில் மாற்றங்கள் அறிவிக்கப்படும் என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பௌர்ணமி விடுமுறைகள் பெளர்ணமி தினக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts