புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார்!! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். குறித்த போராட்டம் இன்று காலை கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாக இடம் பெற்றதுடன்...

பொதுமக்களை அச்சுறுத்திய பேருந்துக்கு எதிராக நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 வழித்தடத்தில் சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேநாயகத்திற்கு அறிவித்துள்ளார். தனியார் பேருந்து மேற்படி வழித்தடத்தில் சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்...
Ad Widget

வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் பணமோசடி செய்த வங்கி முகாமையாளர் கைது!!

அரச வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....

மாவை சேனாதிராஜா பெரும் தலைவர்: இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம்

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில்தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய...

இன்று முதல் பல பகுதிகளில் கன மழை!

இன்று (30) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லி...

பாடசாலை நாட்கள் எண்ணிக்கையில் மாற்றம்!

2025 ஆம் ஆண்டு பாடசாலை பருவ நாட்கள் எண்ணிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் வருடத்திற்கு பாடசாலை நாட்களை அடுத்த வருடம் 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிகளவிலான அரசு விடுமுறைகள் மற்றும் முதல் தவணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும்...

யாழில் தேசிய தைப்பொங்கல் விழா

எதிர்வரும் வருடம், தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) புத்தசாசன, சமய மற்றும்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு...

அஸ்வெசும திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபா உதவித்தொகை!!

அஸ்வெசும பயனாளர் குடும்பத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு பெறாது ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கும் 6000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படும். கல்வி அமைச்சின் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது...

மீண்டும் அதிகரித்துள்ள எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணத்தை பாதித்துள்ள எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாக வடக்கில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் மீண்டும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் எலிக்காய்ச்சலை ஒழிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும், எலிக்காய்ச்சல் தொற்றின் அதிகரிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது....

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் அனுமதியின்றி நுழைந்த நபரொருவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் உண்டான வாக்குவதாம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகரன் தலையீடு செய்து கூட்டத்தை அமைதி நிலைக்கு...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் கண்டியில் கைது!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 21க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தங்க நகைக் கடைகளில் நுழைந்து பணம், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்களை கண்டி, கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 19, 21, 22, 23 மற்றும் 26 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்...

கிளிநொச்சியில் கோர விபத்து – குழந்தை பலி!! மேலும் மூவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்!!

கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார்...

அடுத்த வருடத்திற்குள் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!!

ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் உறுதியான சம்பள உயர்வு வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் சம்பள அதிகரிப்பு தொடர்பான முழு விபரங்களும் உள்ளடக்கப்படும் என தெரிவித்தார்....

15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம்!!

நாட்டில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 47 ஆயிரத்து 599 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சுமார் 3,178 டெங்கு...

இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ள வேலணை வைத்தியசாலை!

வேலணை வங்களாவடி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவை செயற்பாடுகள் ஆளணிப் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு பகுதியளவில் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் தெரியவருகையில் - தீவகப் பிரதேசத்தின் இரண்டாவது பிரதான வைத்தியசாலையாகவும் தீவகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுமான குறித்த வைத்தியசாலை கடந்த நல்லாட்சிக் காலத்தில் அன்றைய சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனரத்னவினால் "பி"...

பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா அவர்களின் குற்றச்சாட்டு பொய்!!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கிடு செய்யப்பட்டது என்றும் அதில் 200 மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் மிகுதி ஊழல் செய்யப்பட்டது என்றும் பொதுவெளியில் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பான உண்மையான நிலையை...

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட...

இராணுவ சிப்பாய் மாரடைப்பால் உயிரிழப்பு!

பலாலி இராணுவ முகாமில் கடமையற்றி வந்த இராணுவ சார்ஜன்ட் மாரடைப்பால் நேற்று திங்கட்கிழமை (23) உயிரிழந்துள்ளார். குருநாகலையைச் சேர்ந்த ரங்கன திஸாநாயக்க 31 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, பலாலி இராணுவ முகாமில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாரடைப்பு...

முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்ட ரோஹிங்யா அகதிகள்!

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக நேற்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று (23) காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்கள்...
Loading posts...

All posts loaded

No more posts