கொழும்பு-யாழ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு

யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று (27) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அக்குரஸ்ஸ, இம்புல்கொடவில் படகில் ஏறி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 16 வயது மாணவன் ஒருவரை 20 வயது இளைஞன் காப்பாற்றியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது....

உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் தற்போது நடைபெற்று வரும் 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று (26) மாலை இடம்பெற்ற விசேட...
Ad Widget

மன்னார் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

”மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அனைத்து செயற்பாடுகள் மீது மக்கள் குற்றம் சுமத்துவதாக தெரிவித்து” வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்கள், ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் வைத்திய சாலைக்கு முன் கொட்டும் மழையிலும் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்...