வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம்!!

முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை மூடி மழைவெள்ளநீர் பாய்வதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் சிரமத்தினை எதிர்கொள்வதோடு விபத்து ஏற்படும் சாத்தியங்கள் அதிகளவாக இருப்பதனால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். கனமழை பெய்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக மழை தொடர்ச்சியாக பெய்துவருகின்றது. இதனால்...

அர்ச்சுனாவுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு!!

இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா இராமநாதன் அமர்ந்து இனவாதம் குறித்து...
Ad Widget

மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்!

நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் நேற்று (23) மாலை 6 மணியளவில் கல்வெட்டுக்கள் அடங்கிய நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. குறித்த நினைவாலயம் நவம்பர் 27 ஆம்...

தாழமுக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியிற்கு மேலாக நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது இன்று காலை மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியின் மத்தியில் தாழ் அமுக்கமாக மாற்றமடையும். இந்த தாழ் அமுக்கமானது மட்டக்களப்பில் இருந்து சுமார் 500 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும். இது மேலும் விருத்தியடைந்து நாட்டின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லும்...

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. பரீட்சை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 333,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும்...