- Thursday
- December 26th, 2024
ஊர்காவற்துறை பகுதியில் கன்றுத்தாச்சி மாடொன்றினை இறைச்சிக்காக வெட்டியவர்களை ஊரவர்கள் கண்டு மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் தப்பி சென்றுள்ளனர். மாட்டினை வெட்டி சென்றவர்கள் தப்பி சென்ற நிலையில் அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றும், சுமார் 200 கிலோ எடையுடைய மாட்டிறைச்சியும் ஊரவர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ஊர்காவற்துறை, சுருவில் பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை (22)...
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனர்த்த ஆபத்து காரணமாக வதிவிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருப்போருக்கு சமைத்த உணவு வழங்குமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபர் அவர்களால்...
மாவீரர் வாரம் நேற்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ். தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்படுவது வழமை, அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை...
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது....
வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் பெறுமதியான காசோலைகளை வழங்கி இரண்டு கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக நாளையளவில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் பிற்பாடு இது தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும். இந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லக்கூடும். ஆனபடியினால்...