Ad Widget

பிரசவத்தின் போது மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் யாழ் வைத்தியசாலைக்கு!!

மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ...

யாழில் புலம்பெயர் தொழிலாளர் சங்கம்!!

யாழ்ப்பாண மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (19) யாழ். மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், ஏற்கனவே கிராம ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 70 புலம்பெயர் தொழிலாளர் சங்கங்கள் காணப்படுவதாகவும், அதன்...
Ad Widget

மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் – சுகாதார அமைச்சர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்திருந்தனர். இந்த மரணத்திற்குக் காரணம் வைத்தியசாலையின் கவனயீனம் என உயிரிழந்த 28...

கற்கோவளம் இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை!

பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி குறித்த காணியை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. மூவருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் காணியே விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கமைய இராணுவ முகாமை அகற்றும் பணி இடம்பெற்று வருகிறது. குறித்த காணி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கற்கோவளம் கடற்கரையுடன் அண்டிய பகுதியில் மூன்று...

பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்; வைத்தியசாலையின் கவனயீனம் என குற்றச்சாட்டு!!

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான வனஜா என்ற இளம் தாயே நேற்றைய தினம்(19) செவ்வாய்கிழமை மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சுத்...

நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது – இலங்கைக்கான சீன தூதுவர்

அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது. இது இனங்களிடையே ஒற்றுமையும் பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தும் ஒரு குறியீடு என இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில்...