- Thursday
- November 21st, 2024
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இக் கலந்துரையாடலில் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து நாளைய வாக்களிப்பு நிலையங்களுக்கு சிரேஷ்ட தலைமை தாங்கும்...
பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட போது குறித்த 12 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மது, புகைத்தலுக்கு எதிராக தலைவர் பிரபாகரன் கட்டளையிடமுன்னர் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமத்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று காலை 10.30 மணியளவில்...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடலில் இன்று (12) தாழமுக்க வலயம் உருவாக வாய்ப்பு உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன் செல்வாக்கின் காரணமாக, நாளை (13) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் (12) வட மாகாணத்தில் பல தடவைகள் மழை...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை, குழுக்கள் குழுக்களாக மியான்மாரில் உள்ள சைபர் முகாம்களுக்கு அனுப்புவது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய அதிரடிப்படை எச்சரித்துள்ளது. அண்மைக்காலமாக அதிகளவான இலங்கையர்கள் குறித்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, அதிக கணினி அறிவு உள்ளவர்களை அதிக சம்பளம் வழங்குவதாகவும், வேறு நாடுகளில் வேலைக்கு அனுப்புவதாகவும்...
தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ்...