Ad Widget

அடுத்த 24 மணி நேரத்திற்கு வௌியான எச்சரிக்கை!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு வௌியான எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (14) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது...

வலி.வடக்கில் மதுபானசாலைக்கு எதிர்ப்பு : மழைக்கு மத்தியில் போராட்டம்!!

தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (14) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.
Ad Widget

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் இறுதி தீர்மானம்!!

சர்ச்சையான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (14) தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்ச்சையான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக 07 பேர்...

வடக்கு அதிவேக ரயில் சேவை சிறிதுகாலம் குறைந்த வேகத்தில்!!

மணிக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கும் நோக்கில் நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி முழுமையடையாத காரணத்தால், அந்தப் பகுதி ரயில்களின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ். முதலி மற்றும் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள்...

நான் ஒருபோதும் தமிழரசு கட்சியை விட்டு வெளியேறமாட்டேன்!

நான் கட்சியை விட்டு வெளியேறிவிடுவேன் என சிலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசு கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னை கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நான் கடைசி வரை போராடுவேன். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல்...

போலித் தமிழ்த் தேசியவாதிகளை நிராகரிக்க வேண்டும்!

முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசைதிருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்கக்கோரியவர்கள் இவர்கள்தான். இன்னொருபுறம் தமிழ்த்தேசியம் பேசும் அரசியல்வாதிகளே மதுபானச்சாலை அனுமதி பத்திரங்களைப் பெற்று விற்றுச்...

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்!

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும்...

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு கட்சியினரின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் யாழிலுள்ள தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது வேட்பாளர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் வேட்பாளர் அறிமுக...