Ad Widget

கண்ணாடி துண்டு வெட்டியதற்கு சிகிச்சை பெற தவறிய பெண் பலி!

கண்ணாடி துண்டுகள் வெட்டியதற்கு உரிய சிகிச்சை பெறாததல் கிருமி தொற்று ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த தயாரூபன் உதயகுமாரி (வயது 50) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாத கால பகுதிக்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு காலில் கண்ணாடி துண்டுகள் வெட்டி உரிய சிகிச்சை பெறாதமையால் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு...

தேர்தல் பிரச்சாரத்திற்கு காணி எடுப்பதில் சகோதரர்களுக்கிடையில் முறுகல்!!

நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக மைதானத்தை பெறுவதில் சகோதரர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெல்லியடியில் உள்ள மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேர்தல் பிரச்சார கூட்டம் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது. குறித்த மைதானத்தில் எதிர்வரும் வாரம் எதிர்க்கட்சி தலைவரின் பிரச்சார...
Ad Widget

யாழில் இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த 52 வயது நபர்!!

இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் 52 வயதான நபரே இச்சம்பவத்திற்கு...

யாழில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு!

இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று புதன்கிழமை (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைய அலுவலகங்கள், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், சிறப்பு அதிரடிப்படை...

வட்டுக்கோட்டையில் வன்முறை கும்பல் அட்டகாசம்!!

நேற்றிரவு வன்முறை கும்பல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன் போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு...

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்!!

சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் கடந்த முதலாம் திகதி (1) இரவு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு 9:30 மணி அளவில் உள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில்...

யாழில் சர்வதேச விளையாட்டு மைதானம் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மைதானத்துடன் யாழ்ப்பாண இளைஞர்களுக்கான விளையாட்டு மேம்பாட்டு திட்டமும்...

யாழில் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்....

மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ; ஒருவரை காணவில்லை!

மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று புதன்கிழமை (04) அதிகாலை இரண்டு இளைஞர்கள் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த...

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்! கைதான மு.தம்பிராசாவுக்கு 13ம் திகதிவரை விளக்கமறியல்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இருவருக்கு பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பி தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதான அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவை செப்டம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி...

முல்லைத்தீவு பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய மூவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை ஓர் இடத்தில் ஒன்றுதிரட்டி காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதாகவும், வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுப்பதாகவும் வாக்குறுதிகளை கூறி மக்களிடம்...

பகிரங்கமாக குறிப்பிட்ட விடயங்களை சஜித் நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் பாரிய விளைவுகள் ஏற்படும்!! – சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானத்தினால் தமிழ் மக்களை பழிவாங்கும் மோசமான செயற்பாட்டில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இதனுடாக நாங்கள் எடுத்த தீர்மானம் சரி என்பது உறுதியாகியுள்ளது. எம்முடன் இணங்கிய விடயங்களையும், பகிரங்கமாக குறிப்பிட்ட விடயங்களையும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நிறைவேற்ற வேண்டும், இல்லையேல் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கையை விடுக்கிறேன் என இலங்கை...

பிரான்ஸிற்கு தப்பிச்செல்ல முயன்ற யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தக வகுப்பு வசதிகளை பயன்படுத்தி பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு அதிகாரிகள் குழுவினால் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 36 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று...

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை (03) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றது. தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாட்டினை அரசியல் தீர்வு...

சஜித்திற்கே மாவை ஆதரவு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,...

சுன்னாகம் பொலிஸாரினால் குடும்பஸ்தர் சித்திரவதை ; விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 28ஆம்...