Ad Widget

பாராளுமன்றம் கலைப்பு!! பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி!!

பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தரவுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று (24) நள்ளிரவுடன் 9ஆவது பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடாத்துவதற்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 04 முதல்...

புதிய பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பு!!

நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 28 வது பிரதமர் ஆவார். இதேவேளை, நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ளஅமைச்சர்கள் பின்வருமாறு: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 01. பாதுகாப்பு 02....
Ad Widget

மாணவனுக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயது மாணவன் ஒருவருக்கு குறித்த...

ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும் ; சுமந்திரன் விளக்கம்

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு 1.69% வாக்குகளை பெற்றது குறித்து தனது கருத்தினை தமிழ் தேசிய கூட்டடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற எண்ணக்கரு உதயமான...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா? என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர...

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியில் இருந்து இராஜினாமா!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இதேவேளை நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலர்பதவிகளில்...

ஜனாதிபதி அனுரகுமாரவின் வெற்றியைக் கொண்டாடும் யாழ் மக்கள்!

ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை பதவியேற்றுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் – ஜனாதிபதி அநுர உறுதி

அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி...

புதிய பிரதமராக ஹாிணி அமரசூாிய?

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பிரதமர் மற்றும் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் சபையும் இன்று அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளனர். எவ்வாறெனினும், புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி முன்னேற்றகரமான மாற்றமாகும்; அரசியல் தீர்வு குறித்து இனிவருங்காலங்களில் பேசுவோம்!!

புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இணங்கியிருக்கும் நிலையில், அதனை முன்னிறுத்தி அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஆதரவை வழங்குவோம் எனவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அவருடன் இனிவருங்காலங்களில் பேசுவோம் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட...

யாழில் வாக்குச்சாவடிகளுக்கு பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பம்!!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8.30 மணியிலிருந்து ஆரம்பமானது. யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280...

ஒரு வருடத்தின் பின்னர் பயணத்தை ஆரம்பித்த நெடுந்தாரகை!

புனரமைக்கப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை (19) கையளித்தார். நெடுந்தாரகை படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று காலை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற...

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி!!

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 492,280 வாக்காளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 100,907 வாக்காளர்களுமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 593,187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். யாழில் 511 வாக்கெடுப்பு நிலையங்களும் கிளிநொச்சியில் 108...

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவது அவசியமானால் நடத்தப்படும்!!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைகள் நிறைவடைந்தவுடன் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் சில வினாக்களுடன்...

நாளை பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

நாளை வெள்ளிக்கிழமை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. செப்டெம்பர் 23 ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் என மேலும்...

கொழும்பு – யாழ் விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் நலன்கருதி விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நீண்ட தூர சேவைகளுக்கென மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதேவேளை தனியார் பயணிகள் பேரூந்து...

திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதி!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ். நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு மீதான விசாரணை நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற போது, 2011ஆம் ஆண்டு புலி...

என்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப் படலாம்! -பா. அரியநேந்திரன்

தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்களைப் பரப்ப பல்வேறு தரப்புகள் திட்டமிட்டு வருவதாகவும், எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்திலநேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”...

தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் குறியீடான சங்குக்கு தமிழ் மக்கள் திரண்டு வந்து வாக்களியுங்கள் – சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை, தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் சனிக்கிழமை (21) நடைபெறவிருக்கும்...

வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்தத்தின் போது கடலில் நீராடிக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல்போயுள்ளார். இவ்வாலயத்தின் வருடாந்த திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று செவ்வாய்க்கிழமை (17)மாலை வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்ற வேளையிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் உயிரிழந்தவர் வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையைச்...
Loading posts...

All posts loaded

No more posts