- Wednesday
- January 15th, 2025
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று (12) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பார் தம்பித்துரை ரஜீவ் ஏற்பாட்டில் இந்த தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. கூட்டத்தில் கட்சியின் யாழ். மாவட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள்...
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய தினம் வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூட்டப்பட்டு குறித்த வீதியானது திறந்து வைக்கப்பட்டுள்ளது இந் நிகழ்வில், மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மதகுருமார்,...
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் யாழ் மறை மாவட்ட ஆயரிற்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ் மறை மாவட்ட ஆயருடனான சந்திப்பில் நாமல் ராஜபக்ச மற்றும் அவர் தரப்பை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் 15...
10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் (10) 3.00 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பிரச்சாரக்...
தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை நடத்தியதாக...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கூட்டத்தில் இந்தத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகதபால தெரிவித்துள்ளார்.
காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்;குதலில் ஐநாவின் பணியாளர்கள் ஆறு பேர் உட்பட 14 கொல்லப்பட்டுள்ளனர். விமானதாக்குதல் இடம்பெற்றது என ஐநா தெரிவித்துள்ளது. காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் இரு பாடசாலைகள் தாக்கப்பட்டன,கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பின் புகலிடத்தின் முகாமையாளர் உட்பட பலர் உள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது....