சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி கின்னஸ் உலக சாதனை!

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழ் இந்த சாதனையை படைத்துள்ளார். இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றின் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கி முடித்தே குறித்த சாதனையை புரிந்துள்ளார்....

அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச பாடசாலைகளும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 24 வரை மூடப்பட்டிருக்குமென கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
Ad Widget

சஜித்துக்கு வழங்கிய ஆதரவு குறித்து நிலவும் சர்ச்சைகள் குறித்து 14 ஆம் திகதி மத்திய குழுக்கூட்டத்தில் ஆராயப்படும்!!

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து தமிழரசுக்கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவுவதாகவும், எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய குழுக்கூட்டத்தில் இதுபற்றி ஆராய்வதற்கும், அதனைத்தொடர்ந்து தெளிவான ஊடக அறிக்கையொன்றை வெளியிடுவதற்கும் உத்தேசித்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாட்டின்...

ஆளுநர் அவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் இடையில் சந்திப்பு!!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் திங்கட்கிழமை (09) சந்தித்து கலந்துரையாடினர். ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு...