Ad Widget

குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலை தொடர்பில் விதுர விக்கிரமநாயக்கவின் கருத்து!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தார் இதன்போது குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலையில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு வகை செய்தல், காங்கேசன்துறையில் உள்ள ஆச்சிரமத்தின் காணி விடுவிப்பு, திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்திலுள்ள பெட்டிக்கடைகளை அகற்றுதல்...

மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை!

யாழ்ப்பாணத்தில் மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி மானிப்பாய் காக்கை தீவு பகுதியில் குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் கணவனை கைது செய்து...
Ad Widget

அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்!!

பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு கொடிய சட்டம். புதிய மெகசின் சிறைச்சாலையில் 15 வருடங்களுக்கு மேலாக உள்ள அரசியல் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். புதிய...

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் ; கைதான மூவரும் பிணையில் விடுதலை!!

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது....

நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை!!

நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று(19) இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கொலை...

ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் : சந்தேகத்தில் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார்...

குருந்தூா் மலை விவகாரம் – மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுக்கும் தென்னிலங்கை!

சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கப்போவதில்லை என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் தெரிவித்தார். மீண்டும் தோ்தலுக்காக இனவாதத்தைக் கையிலெடுக்கும் செயற்பாடுகளை குருந்தூா் மலை விவகாரம் ஊடாக தென்னிலங்கை வேட்பாளா்கள் மேற்கொள்ளக்கூடும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். எனவே தமிழ் மக்கள் இந்த விவகாரத்தில்...

வவுனியாவில் நிலநடுக்கம்!!

வவுனியாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகி உள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மஹகனந்தராவ, ஹக்மன மற்றும் பல்லேகலை நில அதிர்வு நிலையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

யாழில் இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டம்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக இன்று யாழ். மாவட்ட மீனவர்கள் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சேன் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமைலிலுள்ள மருதடிச் சந்தியில்...

குருந்தூர்மலையில் பொலிஸ் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகள் தொடராக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் சிவனை தரிசிப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் இன்றையதினம் காலை 10...

ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதலை கண்டித்து நாளை கவனயீர்ப்பு போராட்டம்!!

யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து நாளை புதன்கிழமை (19) ஆம் திகதி யாழ்ப்பாண பிரதான பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாதோர் வீட்டை தீயிட்டு எரித்து சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில்...

தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை

எதிர்வரும் 24 ஆம் திகதி தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயத்தை இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க (Nandana Ranasinghe) அறிவித்துள்ளார். அத்தோடு, எதிர்வரும் 24 ஆம் திகதி அதிபர் காரியாலயத்தில் தங்களது...

யாழ். ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு??

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சந்தேகம் வெளியிட்டார். யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். குறித்த தகவலறிந்து நேற்று வியாழக்கிழமை (13) அங்கு...

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். சம்பள முரண்பாடு, MCA கொடுப்பனவு அதிகரித்து வழங்குதல்...

அச்சுறுத்தி அடிபணிய வைக்கவே ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது!!

அச்சுவேலி பகுதியில் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நேற்று வியாழக்கிழமை (13) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது அவரது ஊடகப்பணியை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி அவரை அடிபணிய வைக்கும் நடவடிக்கையே எனத் தெரிவித்துள்ள கிளிநொச்சி ஊடக அமையம் இத் தாக்குதல் முயற்சிக்கு தனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. இது குறித்து கிளிநொச்சி ஊடக அமையும் வெளியிட்டுள்ள செய்தி...

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு மீனவர்களை மீட்க நடவடிக்கை!!

காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இருவரும் கரை...

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் – நகை மற்றும் பணம் திருட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் நேற்று மதியம் வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் நேற்று மதியம் குறித்த வீட்டுக்குச் சென்ற வன்முறை குழுவினர் வீட்டிலிருந்த தையல் இயந்திரம்...

யாழில் ஊடகவியலாளாின் வீட்டின் மீது தாக்குதல் : சொத்துக்களுக்கும் சேதம்!

அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் குறித்த கும்பல் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அச்சுவேலிஇ பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்றையதினம் (வியாழக்கிழமை) அதிகாலை 12.15 மணியளவில்,...

டிப்பர் வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இவர் இன்று புதன்கிழமை (12) அதிகாலை யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், நுணாவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமொன்று...

பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற மாணவர்கள்!

பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பேருந்துகள் மாணவர்களை ஏற்றி செல்லாத சம்பவம் தொடர்ச்சியாக பதிவாகி வரும் நிலையில், இன்றைய தினம் பொலிசார் தமது வாகனத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்று பாடசாலையில் விட்டுள்ளனர். கடந்த...
Loading posts...

All posts loaded

No more posts