Ad Widget

களஞ்சியசாலையொன்றில் திடீர் தீ விபத்து: இரு சகோதரர்கள் பலி

பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை, முனைப்பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று(02.01.2024) அதிகாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே விபத்தில்...

உக்ரைன் நகரை சுற்றிவளைத்த ரஷ்ய ட்ரோன் படை : அதிகரித்த பலி எண்ணிக்கை

உக்ரைனின் கார்கிவ் நகரம் ரஷ்ய ட்ரோன் படைகளால் சுற்றிவளைத்து தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது ரஷ்யாவின் பெல்கோரோட் நகரம் மீது உக்ரைன் தொடுத்த கடுமையான தாக்குதலில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதுடன் 108 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் 37 தொகுப்பு குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுகிறது. அத்துடன் குடியிருப்பு வளாகங்கள், உணவகங்கள் மற்றும்...
Ad Widget

ஜனாதிபதி வட மாகாணத்துக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நாட்களில் வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த விஜயத்தின் போது மாவட்டங்களில் நடைபெறும் அபிவிருத்தி குழுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் சுனாமி!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜப்பானில் சில கரையோர பிரதேசங்களை சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மேற்குக் கடலோரம் உள்ள அனைத்து ஜப்பானிய நகரங்களுக்கும்...

வற் வரி இன்றுமுதல் அமுல் : விலை அதிகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரங்கள்!

வற் வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் குறித்த வரி திருத்தம் இன்று முதல் அமுலாகின்றது. அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த வற் வரி இன்று முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வற் வரி...

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்: இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!

யாழ், ஊர்காவற்துறை பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 ,16 வயதுடைய இரு சிறுவர்களும், 19 வயது இளைஞனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளர். இந்நிலையில் குறித்த மூவரையும் விசாரணைக்கு பின்னர் ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை இரு சிறார்களையும் சிறுவர்...

யாழில் உணவகம் ஒன்றில் காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதியிலுள்ள உணவகமொன்றில் உணவருந்த சென்றவர்கள் உணவுக்குள் பிளாஸ்டிக் கட்டையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றமுன்தினம் (30) இரவு உணவருந்த சென்றவர்களுக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் பொறுப்பான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த உணவகத்தின் செயலை விமர்சித்து சமூக...

முல்லைத்தீவில் குடும்ப பெண்மீது கத்திக்குத்து!!

முல்லைத்தீவில் குடும்ப பெண்மீது கணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மருத்துவமனைக்கு முன்பாக நேற்று (31.12.2023)குறித்த பெண் நின்றுக்கொண்டிருந்ததாகவும், இதன்போதே கணவரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படுகயாமடைந்த பெண் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆண்டின் முதல் நாளிலேயே எரிபொருள் விலை அதிகரிப்பு!!

இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் ரக...