2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 41 வாக்குகளால் நிறைவேற்றம்!

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி ஆதரவாக 122 பேரும் எதிராக 81 பேரும் வாக்களித்திருந்தனர்.

இதேவேளை பொதுஜன பெரமுன வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரித்து வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்து வாக்களித்தது.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி எதிராகவே வாக்களித்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. மேலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts