200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் சரிந்ததால் மின்சாரம் தடை!!

சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று இன்று திடீரென மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்ததில் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் இருந்த பெட்டிக்கடையொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இதன்போது சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் மாற்றம் : முச்சக்கர வண்டி கட்டணம் குறித்து முடிவு

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மாதந்தோறும் எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படும் நிலையில் முச்சக்கர வண்டி கட்டணத்தையும் ஒவ்வொரு தடவையும் மாற்றியமைக்க முடியாது என கூறினார். இலங்கை பெட்ரோலிய...
Ad Widget

முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று தொடக்கம் காலவரையறையற்ற தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சார்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடரும்: ஜோ பைடன் உறுதி

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கத்தைத் தவிர்க்கும் தற்காலிக உடன்பாட்டில், உக்ரைனுக்கான ஆறு பில்லியன் டொலர் கூடுதல் உதவி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ''குடியரசுக் கட்சியின் தீவிரப் போக்குடைய உறுப்பினர்கள் சிலர் உக்ரைனுக்கு கூடுதல் இராணுவ உதவி...

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பா?

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது அதற்கமைய பேருந்து கட்டணத்தை குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும், சுப்பர்...

நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறிய விவகாரம் : உடனடி விசாரணைக்கு பணிப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இன்று திங்கட்கிழமை அவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ”நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கடிகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட...

சாவகச்சேரி விபத்தில் இளைஞர் பலி!

சாவகச்சேரி, நுணாவில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் பகுதியில் விடுதி ஒன்றின்...

உரிமைகள் கிடைக்கப்பெறும் வரையில் போராட்டங்கள் தொடரும்!!

நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது என நாடாளுமன்ற எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்கர்ட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்...

லிட்ரோ விலைகளில் மாற்றம்!

சமையல் எரிவாயு விலைகளில் இம்முறையும் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தெரிவித்துள்ளது. அதன்படி உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் 4ம் திகதி புதிய விலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய...

மைத்திரியும் கோட்டபயவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பணம் வழங்கினார்கள் – ஆசாத் மௌலானா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் அவர்கள் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதிதருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு...

எரிபொருள் விலை அதிகரிப்பு!!

நேற்று (01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்தின் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையக 6 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 420 ரூபாவாகும். 1 லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது....

சக மாணவனுக்கு இனிப்பு வழங்கிய மாணவியால் நேர்ந்த விபரீதம்!!

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவரிடமிருந்து சொக்லேட்டை வாங்கிய மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன், குறித்த மாணவியின் அண்ணனால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு...

தொடரும் உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்!!

உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் சோச்சியில் உள்ள ஹெலிகாப்டர் தளம் மற்றும் ஸ்மோலென்ஸ்கில் உள்ள விமான தொழிற்சாலையை தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. உள்ளூர் ரஷ்ய சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில் சோச்சியின் அட்லர் விமான தளத்திற்கு அருகே புகை மற்றும் வெடிப்புகளைக் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காணொளியில் குறித்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதத்தின்...