- Sunday
- December 22nd, 2024
யாழில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் கண் நோய் வேகமாகப் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், கண் கடுமையாகச் சிவப்படைதல், கண்ணில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படுத்தல் இதன் அறிகுறிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...
முல்லைத்தீவு நீதிபதியாக இருந்த சரவணராஜா தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில் அது தொடர்பாக அவரே தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி குறிப்பில், ''நீதிபதி சரவணராஜாவிற்கு மொழிப்பிரச்சனை இருந்திருக்கும் கூறுகின்றார்''...
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து தனது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் அவரது தொலைபேசி...
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் இன்று (05.10.2023) ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட சுமார் 49 பேர் இறந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்...
மாணவியைக் கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தருவதில்லை என அவரது ஆசிரியர் கண்டித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இது குறித்து அம்மாணவி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் பாடைசாலைக்கு வந்த தந்தையும் அவரது நண்பரும் பாடசாலை வாசலில்...
இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, உலகளாவிய ரீதியில் ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகுவதுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கும் மது அருந்துவதே முக்கிய காரணம் என்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்த முடிவு செய்து இருக்கின்றோம் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (04.10.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (04.10.2023) இரவு 8.30 மணியளவில் பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி...
கொழும்பின் பல பகுதிகளை இலக்கு வைத்து எதிர்வரும் நாட்களில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என கிடைத்த தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார் என திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது...
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகியமை தொடர்பாக யாழில் இன்று(04) மனித சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கலந்துகொண்டு...
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ”செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் இணையம் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.ugc.ac.lk ஊடாக சமர்ப்பிக்கலாம். 2022...
இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குனர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், துடுப்பாட்டத்தில் திறமையானவர்களை கண்டறிவதற்கான பயிற்சி முகாம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. அதனை...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை (4) மீண்டும் திருத்தப்படவுள்ளது. கடந்த தடவை, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு தற்போது 3,127 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதையடுத்து, தற்போது 1,256 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 2.3...
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். நீதிபதி சரவணராஜா தொடர்பில் அவர் நேற்று(03.10.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்...
அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளதாக சம்மேளனத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். வாழ்க்கை செலவு கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்காமல் இருப்பதாக சம்மேளனத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்....
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜா பதவி விலகியுள்ளமை தொடர்பான எந்த பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து...
உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை எனவும் எதிர்காலத்தில் உக்ரைனிய வீரர்களுக்கு அவர்களது நாட்டில் பிரித்தானிய வீரர்கள் பயிற்சி அளிக்கலாம் எனவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு செல்லும் பிரித்தானிய வீரர்கள் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் எத்தகைய போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கான அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து 20 மாதங்களாக நடைபெற்று...
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றைய தினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின. யாழ்மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நேற்றைய தினம் ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின்...
முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சாஜனாக கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் தூக்கில் தாெங்கிய நிலையில்...
வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் நாட்டில் நடைமுறைக்கு வருகிறது. இந்த முறைமையின் ஊடாக, வீட்டில் இருந்தவாறு இணையத்தின் ஊடாக கட்டணங்களை செலுத்தி, வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
Loading posts...
All posts loaded
No more posts