மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(10.10.2023) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்...

சங்கானை பொதுச் சந்தைக்குள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் – பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்களா?

வலிகாமம் மேற்கு சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவு வேளை அத்துமீறி நுழைந்த குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் போது, அங்கு வந்த போதையில் இருந்தவர்கள்...
Ad Widget

ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் தொடர்பான அறிவிப்பு!

ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை நாடளாவிய ரீதியில் இரண்டாயிர்தது 888 பரீட்சை மத்திய நிலையங்களில் எதிர்வரும் 15 ஆம் திகதி தரம்...

இந்தியா – இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டது

இந்தியா - இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பமாவிருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகம் நாகப்பட்டினம் - இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை இன்று (10) ஆரம்பமாகவிருந்த நிலையில் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. செரியாபாணி கப்பலின் பரீட்சார்த்த...

அனைத்து பொருட்களுக்கமான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!!

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கோர விபத்து : இரு விசேட அதிரடிப்படையினர் பலி..! 6பேர் படுகாயம்!!

வவுனியா வெளிக்குளம் பகுதியில் திங்கட்கிழமை (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட் விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை (9) 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான...

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் முஸ்லிம் தரப்பின் ஆதரவுடன் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்து அழைப்பு!!

வடக்கு,கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு முஸ்லிம் தரப்பின் பூரண ஆதரவுடன் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்த அழைப்பு விடுத்துள்ளதோடு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புக்களையும் கோரியுள்ளன. வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (09) யாழ்.தந்தை செல்வா அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு அரசியல் கட்சிகளின்...

யாழில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி!!

யாழ்ப்பாணத்தில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் யாழப்பாணம் - ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் நேற்று (08.10.2023) இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் அச்சுவேலி - தோப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதையுடைய கிட்டுனன் லோகநாதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை...

அமெரிக்க படையினரின் உள்நுழைவு: இஸ்ரேல் தொடர்பில் வெள்ளை மாளிகை விளக்கம்

இஸ்ரேலிற்கு அமெரிக்க படையினரை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா தனது படைகளை அனுப்பும் திட்டம் எதனையும் வகுக்கவில்லை. எனினும் தனது பிராந்தியத்தில் நலன்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் அமெரிக்கா ஈடுபடும் என அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு விடயத்தில் இஸ்ரேல் மேலும்...

எச்சரிக்கையுடன் வௌியான புதிய அறிவிப்பு!!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (09) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த...

யாழில் சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!!

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, இன்று திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை...

யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு முஸ்தீபு

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, நாளை மறுதினம் புதன்கிழமை காலை ஆரம்பமாகும் பேரணி யாழ் நகரில் உள்ள வீதி வழியாக சென்று, இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக...

மீண்டும் பரீட்சை திககி ஒத்திவைப்பு!!

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டு, சாதாரண தரப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பம்!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை நாளை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்று காலை இந்தியா – நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட குறித்த கப்பல் பகல் 1.15 இக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த...

அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம்!

எதிர்காலத்தில் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதன்படி அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும் என்றும் மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர்...

யாழில் வாள்வெட்டு ; இளைஞர் ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றனர்....

யாழில்16 வயது மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

திருநெல்வேலி பகுதியில் தவறான முடிவெடுத்து மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (08.10.2023) இடம்பெற்றுள்ளது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் நேற்றுமுன்தினம் (07) கோயிலுக்கு...

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கொழும்பில் மாபெரும் போராட்டம்!!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ''நீதித்துறை மீது கை வைக்காதே'' என்னும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி.தவராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட...

இருளில் மூழ்கிய உக்ரைன்! அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

கடந்த குளிர்காலத்தில் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்கள் உக்ரைனின் எரிசக்தி அமைப்பின் குறிப்பிடத்தக்க பகுதியை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்காலத்தில் உக்ரைனின் விமானப்படை அதன் மண்ணில் பதிவு செய்யப்பட்ட மோசமான தாக்குதலாக இதை கருதுகின்றது. ஈரான் வடிவமைத்த ஷாஹெட் காமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியிருப்பது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை முறியடிக்கும் என்று செப்டெம்பர் மாதத்திற்கான தரவு...

கிளிநொச்சியில் வீடு ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது!!

கிளிநொச்சி கல்மடுநகர் இராமநாதபுரம் பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று வியாழக்கிழமை (05) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 30 ஏக்கர் சந்திப்பதில் உள்ள வீடு ஒன்றின் மீது குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களுக்கு இடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை...
Loading posts...

All posts loaded

No more posts