2022 ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்கவராக உக்ரைன் ஜனாதிபதி தெரிவு

உக்ரைனின் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இங்கிலாந்து டைம்ஸ் செய்தித்தாளின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

44 வயதான உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, தனது நாட்டிலும் வெளிநாட்டிலும் பலரால் வீரர் என்று அழைக்கப்படுகின்றார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிராக தேசத்தை வழிநடத்தும் அதேவேளையில் ஜனநாயகத்தின் அடையாளமாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

பெப்ரவரி 24 அன்று ரஷ்யப் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்தன, எனினும் செலேன்ஸ்கி, கியேவை விட்டு வெளியேற மறுத்துவிட்டார், மாறாக நாட்டிலேயே தங்கி தனது நாட்டு மக்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.உக்ரைனில் கிட்டத்தட்ட 10 மாதங்களாகப் போர் முடிவுக்கு வராமல் தொடர்கின்றது.

ஜெலென்ஸ்கி ஏப்ரல் 2019 இல் உக்ரைனின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், முன்பு ஒரு நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் இருந்தார். ‘சேர்வண்ட் ஒஃப் தி பீப்பிள்’ படத்தில் நடித்ததற்காக செலென்ஸ்கி நாட்டில் நன்கு அறியப்பட்டார்.

Related Posts