2022ஆம் ஆண்டு மூன்றாம் தவணை டிசெம்பர் 23ஆம் திகதிவரை நீடிக்கும்!!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை இந்த வருடம் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணை 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி வரை நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாடசாலை சீருடை விநியோகம் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து செயல்முறைப் பரீட்சைகளும் ஜூலை 10ஆம் திகதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Posts