2021 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!! 2022 உயர்தரப் பரீட்சை ஓகஸட்டில்!!

இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலேயே நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடமொன்றை இவ்வருடம் திறக்க அரசு தீர்மானித்துள்ளது என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறினார்.

கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இவற்றைத் தெரிவித்துள்ளார்.

Related Posts