2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல்

2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி பொது தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றம் உறுப்பினர்களை தெரிவு செய்யப்படுவார்கள் என வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியானது.

நாடாளுமன்றம் உறுப்பினர்களை தெரிவு செய்யும் திகதி 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதியாகும். அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை 2018 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 2018 நவம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts