2017 இற்குள் உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படும் : ஜனாதிபதி

தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுவரும் உள்ளுராட்சி சபைகளுக்கானத் தேர்தலை இவ்வாண்டுக்குள் நடத்த முடியும் என தாம் உறுதியாக நம்புவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொகுதிகளுக்கான எல்லைகள் உரிய முறையில் நிர்ணயிக்கப்படாமலேயே உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தாமதமாவதற்கு காரணம் எனவும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.

புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டுயெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் மார்ச் 12 இயக்கம் நடத்திய மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதீதியாக கலந்துகொண்டிருந்ததுடன், அமைச்சர்களான மனோ கணேசன், மஹிந்த அமரவீர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வெளிநாட்டு ராஜதந்திரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு ஜனாதிபதி உரையாற்றுகையில்…

“மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கும் காலதாமதம் ஏற்பட்டமைக்கு தொகுதிகளை நிர்ணயிக்கும் நடவடிக்கை கட்சி பேதமன்றி சுயாதீனமாகவும் மேற்கொள்ளப்படாமையே காரணமாகும்.

அதன் விளைவாகவே புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் மீண்டும் அது தொடர்பில் ஆராயும் பொருட்டு மீண்டும் குழுவொன்றை அமைத்து தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடபில் சிற்சில கருத்துக்கள் உள்ளன. பல்வேறு விமர்சனங்களும் உள்ளன.

எவ்வாறான விமர்சனங்கள் இருந்தாலும் எங்களால் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய மாற்றத்தின் ஆரம்பமாக நாம் இதனைப் பார்கின்றோம். புதிய தேர்தல் முறையின் கீழ் இவ்வாண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

புதிய மாகாண சபைத் தேர்தல் முறையை உருவாக்குதல், மாகாண சபை உறுப்பினர்கள் தமக்கானவர்கள் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதே அதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது. இருக்கின்றார்கள் என்ற எண்ண உருவாக்கும். அதேபோன்று விருப்புவாக்கு முறைமை இல்லாதொழித்து அரசியல் கட்சியாக முன்னிலைப்படுத்தப்படுகின்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு தேர்தல் வேட்பாளர்கள் செயற்படுகின்ற வாய்ப்பு உள்ளது.

Related Posts