2017-ஆம் ஆண்டுக்குள் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய கட்டடம் கட்டப்படும் என்று சங்கப் பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

படப்பிடிப்பு நேரம் போக, சங்கப் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். சங்க உறுப்பினர்களின் பட்டியல் வரையறை செய்யப்படுகிறது.

நடிக்காதவர்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். நடிப்பவர்கள் பலருக்கு உறுப்பினர்கள் அட்டைகள் இல்லை. இது குறித்து ஆராய்ந்து வருகிறோம். மூன்று படங்களுக்கு மேல் நடித்தவர்கள் கட்டாயமாக சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்.

சங்கத்துக்குப் புதிய கட்டடம் என்பதுதான் எங்களின் குரலாக இருக்கும். அதை நோக்கி முதல் படியை எடுத்து வைத்துள்ளோம்.

எல்லோரும் வியக்கும் வகையில், 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டடம் கட்டி முடிக்கப்படும். காவிரி பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தீர்த்து வைக்க அரசு இருக்கிறது.

நடிகர் சங்கம் அந்தப் பிரச்னைகளில் ஈடுபடாது என்பதைச் சொல்லி வருகிறேன். தனிப்பட்ட முறையில் குரல் கொடுப்பது நடிகர்களின் சொந்த உரிமை என்றார் விஷால்.

Related Posts