பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை முன்வைக்க இருக்கின்றார்.
அந்த ஜனாதிபதி அவர்களின் யோசனையிலே மூன்று விடயங்கள் முக்கியமாக கூறப்பட்டிருக்கின்றது. அதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, புதிய தேர்தல் சட்டம் திருத்தம் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு என்பன அடங்குகின்றன.
68 வருட கால பிரச்சினையினை தீர்க்கப்பட வேண்டும் என்று எழுத்து மூல பிரேரணையினை நாடாளுமன்றில் சமர்ப்பித்து ஆரம்பிக்கின்ற வருடம் எனக் குறிப்பிட்டுள்ளார். மிகவும் தெட்டதெளிவாக 2016 ஆம் ஆண்டிலே அரசியல் தீர்வு கிடைக்கும். தேசிய இனப்பிரச்சணைக்கான தீர்வு என அதில் கூறப்பட்டுள்ளது என்று எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.
சுமந்திரனுடன் மாகாணசபை உறுப்பினர்கள் ஆர்னோல்ட் மற்றும் சயந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். வடக்குகிழக்கு மக்களுக்கு பலனற்ற வரவுசெலவுத்திட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தமை குறித்து அரசசார்ப்பற்ற நிறுவன பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்மொழியும் பொதுத்திட்டங்களுக்குரிய நிதிப்பங்களிப்பினை வரவுசெலவுத்திட்டத்திற்கு அப்பால் சென்று உலகநாடுகளின் ஊடாக பெற்றுத்தருவதாக சுமந்திரன் உறுதியளித்தார்.
மக்களுடன் நின்று சேவையாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விட்ட இடைவெளியினால் தான் தமிழ் சிவில் சமூகம் போன்ற கடிதத்தலைப்பு அமைப்புக்கள் மக்கள் குறித்து மக்களின் குரலாக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன என்று கடிந்து கொண்டார். இருப்பினும் அதனை அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மறுத்தனர்.
தமிழ் மக்கள் பேரவையின் 2வது முக்கிய அமர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் இந்தச்சந்திப்பு சுமந்திரனின் வேண்டுகோளில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
சந்திப்பு முடிந்து சுமந்திரன் குழுவினர் வெளியேறியதும் நடைபெற்ற கூட்டத்தில், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் , நாளை நடைபெறும் தமிழ் மக்கள் பேரவையின் 2 வது அமர்வில் தனது பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்வது என முடிவுசெய்துள்ளதாக அறிய வருகின்றது.