2015-ம் ஆண்டு ஐசிசி விருதுகள் : பட்டியலில் இலங்கை வீரர்கள் இல்லை

நடப்பு(2015) ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த வீரர்கள், நடுவர்கள் உள்ளிட்ட விருதுகளை ஐசிசி ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது.

நடப்பு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரராக தென் ஆப்பிரிக்கா அணியின் டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் ஸ்டீவ் ஸ்மித்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள் பட்டியல் பின்வருமாறு:-

  • ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் விருது: ஸ்டீஸ் ஸ்மீத்(ஆஸ்திரேலியா)
  • சிறந்த டெஸ்ட் வீரர் : ஸ்டீஸ் ஸ்மீத்(ஆஸ்திரேலியா)
  • ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்: டி வில்லியர்ஸ்(தென் ஆப்பிரிக்கா)
  • டி20 போட்டிக்கான சிறந்த வீரர்: டு பிளிஸ்சிஸ்(தென் ஆப்பிரிக்கா)
  • டி20 போட்டிக்கான சிறந்த வீரர்(பெண்கள்): ஸ்டபனி டெய்லர்(மேற்கிந்திய தீவுகள்)
  • வளர்ந்து வரும் சிறந்த வீரர் விருது: ஜோஸ் ஹாஸ்ல்வுட்(ஆஸ்திரேலியா)
  • கிரிக்கெட்டின் சிறந்த உற்சாக வீரர்: பிரண்டன் மெக்கல்லம்(நியூசிலாந்து)
  • ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்(பெண்கள்): மெக் லன்னிங்(ஆஸ்திரேலியா)
  • கூடுதல் மற்றும் இணைப்பு வீரர் விருது: குர்ரம் கான்(ஐக்கிய அரபு எமிரேட்)
  • சிறந்த நடுவருக்கான விருது: ரிச்சர்டு கெட்டல்போரோப்(இங்கிலாந்து)

ஐசிசி விருதுகளுக்கான பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த வீரர்கள் பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts