2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கலாம். பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களின் விண்ணப்பங்களை பாடசாலை அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதன்படி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், த.இலக்கம் 1503, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அத்துடன் குறித்த திகதிக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.