2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தங்கள் ஆரம்பம்

voters-list2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் நேற்று (16) ஆரம்பிக்கப்பட்டதாக பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.

வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் சகல மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்று வருகின்றன.

வாக்காளர் இடாப்பு திருத்தப்படுவதற்கு முன்னர் நாடு பூராவும் உள்ள சுமார் 14 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன்படி சகல கிராம உத்தியோகஸ்தர்களும் தமது பிரதேசத்தில் உள்ள சகல வீடுகளுக்கும் சென்று வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் முஹம்மத் குறிப்பிட்டார்.

வாக்காளர் இடாப்பின் மாதிரி விண்ணப்பப்படிவங்கள் ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னர் சகல வீடுகளுக்கும் விநியோகிக்குமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 15 ஆம் திகதிக்கு பின்னர் வாக்காளர் இடாப்பின் இரண்டாம் கட்ட திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் பிரதி தேர்தல் ஆணையாளர் முஹம்மத் குறிப்பிட்டார்.

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் 2014 வாக்காளர் இடாப்பின் பிரகாரமே தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts