2013இல் பட்டதாரிகள் 25 பேருக்கு மீன்பிடி பரிசோதகர் நியமனம்; ராஜித யாழில் தெரிவிப்பு

2013 ஆம் ஆண்டு 25 பட்டதாரிகளுக்கு மீன்பிடி பரிசோதகர்களுக்கான நியமனத்தினை கடற்றொழில் அமைச்சினால் வழங்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்று யாழில் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைக்கப்பட்ட ஐஸ்தொழிற்சாலையினை திறந்து வைக்கும் நிகழ்வின் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் உள்ள கடற்றொழினை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழ் பேசக்கூடிய உத்தியேகத்தர்களாக யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறும் 25 பட்டதாரிகளுக்கு மீன்பிடிப் பரிசோதகர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் வடக்கில் தற்போதுள்ள அபிவிருத்திப் பணிகளை விட 2013ஆம் ஆண்டு மேலும் அபிவிருத்தியில் உயர்வு ஏற்படும் என்றார்.

Related Posts