2013ஆம் ஆண்டில் 5 இலட்சத்து 16 ஆயிரத்து 974 வாக்காளர்கள் பதிவு – சி.குகநாதன்

voters-listயாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்தாண்டில் மட்டும் 5 இலட்சத்து 16 ஆயிரத்து 974 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சி. குகநாதன் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டு இம்மாதம் 20ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அதனடிப்படையில், யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 508 வாக்காளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 75 ஆயிரத்து 466 பேரும் பதிவு செய்துள்ளனர்.

2009ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை குறித்த மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் வசிக்கும் வாக்காளர்களின் பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு, அதில் கணிசமானோர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு பதிவு செய்தோரின் புள்ளிவிபரங்கள் தேர்தல் காலங்களில் வெளியிடப்படுமென்றும், 2014ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்படுமென்றும் யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts