2011 – 2012 சாதாரண தர தகவல் தொழிநுட்ப பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

exam_deptகல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கான தகவல் தொழிநுட்ப பாடத்தின் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்குமான தகவல் தொழிநுட்ப பாட பரீட்சை பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர தகவல் தொழிநுட்ப பாட பரீட்சையில் ஒரு லட்சத்து 23,065 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர தகவல் தொழிநுட்ப பாட பரீட்சையில் ஒரு லட்சத்து 48,500 மாணவர்களும் தோற்றியிருந்தனர்.

இம் மாணவர்கள் அனைவருக்குமான பரீட்சை பெறுபேறுகள் இம்முறை ஒன்றாக வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Related Posts