2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரஙள் இரத்து!!

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப் இல்லாமல் எட்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டியவை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அச்சிட முடியாத சுமார் 300,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் குவிந்து கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts