2000 கர்ப்பிணிகள் பங்கேற்று செய்த யோகா !! கின்னஸ் சாதனை!

ராஜ்கோட்டில் இன்று நடந்த யோகாவில் சுமார் 2000 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு சீனாவின் கின்னஸ் ரெக்கார்டை முறியடித்தனர்.

pragnet-women-yoga

யோகா பயிற்சிகள் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என, ஐ.நா சபை அறிவித்துள்ளது.

அதன்படி, சர்வதேச முதல் யோகா தினம், கடந்த ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்தியா, உலகிற்கு அளித்த கொடையான யோகாவின் புகழை, உலகளவில் பிரபலப்படுத்தும் வகையில், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரதமர் மோடியும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார். இரண்டாம் ஆண்டாக, இன்று, சர்வதேச யோகா தினம் கொண்டாப்படுகிறது.

இந்தியா முழுவதும் ஒரு லட்சம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. வாரணாசி, லக்னோ, ஜம்மு, இம்பால், பெங்களூரு, விஜயவாடா, வதோதரா உள்ளிட்ட, 10 இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராஜ்கோட்டில் இன்று நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 2000 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு சீனாவில் சுமார் 913 கர்ப்பிணிகள் யோகா பயிற்சியில் கலந்து கொண்டு யோகா செய்தனர். இதுதான் இதுவரை உலகளவில் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டது அதிகம் என்றும் கின்னஸ் ரெக்கார்டாகவும் இருந்தது.

இந்த சாதனையை தற்போது ராஜ்கோட்டில் நடந்த யோகா பயிற்சியில் முறியடிக்கப்பட்டது. இன்று நடந்த பயிற்சியில் சுமார் 2000 கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு யோகா செய்து அசத்தினர்.

Related Posts