வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் துறைமுக நெடுஞ்சாலை அமைச்சின் ஏற்பாட்டில் தொண்டைமானாறு பாலம் புனரமைக்கப்பட்டு நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பாலமானது தொண்டமனாறு ஆற்றுக்கு மேலாக கட்டப்பட்டதுடன் 120 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டமைந்ததுள்ளது. இதன் பணிகளுக்காக 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதன்போது வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, இலங்கைக்கான யுனொப்ஸ் பிரதிநிதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் ஏக்கநாயக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண திட்டப்பணிப்பாளர் மோசஸ் மரியதாசன் மற்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாண பிரதம பொறியியலாளர் சுதாகரன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.
இதேவேளை, குறித்த பாலம் அமைந்துள்ள பிரதேசம் 1990 முதல் 2011 வரையான காலப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்ததுடன் தற்போது மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.