200 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

Jomel Warrican

நேற்று கொழும்பு பீ.சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாயணசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த அணி சார்பில் மிலிந்த ஶ்ரீ வர்த்தன 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் சார்பில் Jomel Warrican 4 விக்கெட்டுக்களையும் டெய்லர் மற்றும் ஹோல்டர் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி 200 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இதனயைடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதலாவது இன்னிங்சில் ஆட்ட நேர முடிவில் 17 ஒட்டங்களுக்கு ஒரு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Related Posts