20 வருடங்களுக்கு முன்னர் பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய காணிகள் விடுவிப்பு?

கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பறிமுதல் செய்யப்பட்ட, பல நூறு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலிகாமம் தெற்கு, பலாலி விமான தளத்தை அண்டிய காணிகளும் அதில் உள்ளடங்குவதாகவும், இராணு முகாம்கள் மற்றும் விமான தளத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணிகளை விடுவிப்பதற்கான ஆய்வு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அந்த பணிகள் நிறைவடைந்தவுடன் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படுமென, எதிர்பார்க்கப்படுகின்றது

Related Posts