20 மைக்ரோன் இற்கும் குறைவான அளவுடைய பொலித்தீன் பாவனைக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக உணவு வகைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகளின் மைக்ரான் அளவு 20க்கும் குறைவாக காணப்படுகின்றது.
இவ்வாறான பொலித்தீன் வகை தயாரிப்பு, விற்பனை மற்றும் பாவனை போன்றவற்றிற்கு எதிராக இன்று முதல் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக 10,000 ரூபாவிற்கு உட்பட்ட தண்டம் அறவிடுவதற்கும் சிறை தண்டனை வழங்குவதற்கும் முடியும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.