20 மாணவர்களுக்கு HIV : பல்கலை அனுமதியின்போது மாணவர்களுக்கு HIV பரிசோதனை!

பாடசாலை மாணவர்கள் 20 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படும் மாணவர்களிடம் எயிட்ஸ் நோய் தொடர்பாக அவர்களின் குருதி மாதிரி பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Related Posts