2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இம்மாதம் வரையில் 1,190 பால்மா மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இவற்றில் 20 சதவீதமான பால்மா மாதிரிகளில் டீசிடீ எனப்படும் இரசாயன நச்சுப்பொருட்கள் கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டில் 84 ஆயிரம் மெற்றிக் தொன் பால்மா இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும் 2014இல் 6,000 மெற்றிக் தொன் பால்மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்மாக்களும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தினால் டீ.சி.டீ பரிசோனை செய்யப்படுகின்றன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.