20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை

பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் நோக்குடன் அரச சேவையில் உள்ள 20 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம்.

இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2018 – 2019 மற்றும் 2020ம் ஆண்டு காலப்பகுதியில் அரச சேவையில் இணைந்து கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக பட்டதாரிகளை இலக்காகக் கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

40 வயதிற்கு மேற்படாதவர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

Related Posts