உபாதைக்குள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இந்தியா சென்றிருந்த லசித் மாலிங்க கடந்த போட்டியில் பங்குபற்றி இருக்கவில்லை.
முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவரால் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
இதன்காரணமாக அவர் மேலும் இந்தியாவில் தங்கி இருப்பதில் பயனில்லை என்பதனால் அவரை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவரின் வெற்றிடத்திற்கு தகுதியான ஒருவரை இணைத்துக் கொள்ள இருப்பதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.